Home இந்தியா ஜெயலலிதாவுக்கு ஜாமீன் உறுதி – முன்னாள் சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் உறுதி – முன்னாள் சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா

541
0
SHARE
Ad

jaya3கர்நாடகா, அக்டோபர் 7 – கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று ஜெயலலிதா பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவர் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக, சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங்குக்கு முன்பு அரசு சார்பில் சிறப்பு வழக்கறிஞராக வாதாடிய ஆச்சார்யா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இதுகுறித்து அவர் கூறியதாவது, “சொத்து குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் நான் ஆஜராகி வந்தேன். எனக்கு பல்வேறு இடங்களில் இருந்து நெருக்கடி அதிகமாக வந்தது.வேறு வழியில்லாமல் நான் அந்த பதவியில் இருந்து விலகினேன்”.

“தமிழ்நாட்டில் இந்த வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்ற காரணத்தால் தான் உச்சநீதிமன்றம் அந்த வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது. அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரத்தையும் கர்நாடக அரசுக்கு வழங்கியது”.

“ஆனால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதன்படி வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.”

“இதுபோன்ற வழக்குகளில் 5 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால், அந்த தண்டனையை நிறுத்திவைத்து அவர்களை ஜாமீனில் விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. அதன்படி குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்று முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார்.