தென் கொரியாவுடன் கடும் பகையில் இருந்து வந்த வட கொரியா, அதிபர் தொடர்பான வந்தந்திகளின் காரணமாக கடும் உள்நாட்டுக் குழப்பத்திற்கு ஆளானது.
அதிகரித்து வரும் உள்நாட்டுக் குழப்பத்தை தவிர்க்கும் வகையில் அரசு தரப்பு, அதிபர் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டபோது காலில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தது.
மேலும், அவர் குணமடையும் வரையில் அவரது சகோதரி கிம் யோ ஜோங் அதிபருக்கான பணியை கவனிப்பார் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் கிங் ஜோங் உன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் அரசு அதிகாரிகளும் உடன் இருந்தனர். இதன் மூலம் நீண்ட நாட்களாக அவர் பற்றி எழுந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.
மேலும், காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிபடுத்தும் வகையில் அவர் கைத்தடி உதவியுடன் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.