Home இந்தியா கனிமொழி, ராசா மீது கடும் நடவடிக்கை – சிபிஐ நீதிமன்றம்!

கனிமொழி, ராசா மீது கடும் நடவடிக்கை – சிபிஐ நீதிமன்றம்!

622
0
SHARE
Ad

a_raja_61புதுடெல்லி, நவம்பர் 18 – 2ஜி விவகாரம் தொடர்பாக டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராசா உடபட 18 பேரும் நேரில் ஆஜராக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைஞர் தொலைக்காட்சிக்கு முறைகேடாக பணம் வழங்கப்பட்ட வழக்கில் மத்திய அமலாக்கப் பிரிவினரால் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் உள்ளிட்ட 10 பேரும், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உள்ளிட்ட 9 நிறுவனங்கள் என மொத்தம் 19 பேருக்கு எதிராக பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த குற்றப்பத்திரிகையை அடுத்து தற்போது மத்திய அமலாக்கப் பிரிவு சார்பாக, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும், விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இதுகுறித்து இன்று நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் ஆ.ராசா நேரில் ஆஜரானார். மற்றவர்கள் யாரும் ஆஜராகவில்லை. மத்திய அமலாக்கப் பிரிவினரின் கூடுதல் இயக்குநர் இமான்சு குமார் ஆஜரானார்.

இதனை அடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய மொத்தம் 19 பேரில் தயாளுஅம்மாளுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அவரை தவிர்த்து மற்ற 18 பேரும் வரும் 19-ஆம் தேதி தவறாமல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.