Home வணிகம்/தொழில் நுட்பம் சீனா-ஆஸ்திரேலியா இடையே தடை இல்லா வர்த்தகம் – 10 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறியது!

சீனா-ஆஸ்திரேலியா இடையே தடை இல்லா வர்த்தகம் – 10 ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறியது!

492
0
SHARE
Ad

china Flag-mapகேன்பெர்ரா, நவம்பர் 18 – சீனா மற்றும் ஆஸ்திரேலியா தங்களுக்கிடையே தடையில்லா  வர்த்தகம் மேற்கொள்ள புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளன.

இதன் மூலம், சீனாவின் தேசிய வருவாய் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

சீனா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நிறைவேற்றப்பட்டுள்ள இந்த புதிய ஒப்பந்தம் சுமார் 10 ஆண்டு காலம் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பின் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வர்த்தகம் தொடங்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், அடுத்த ஒரு சில ஆண்டுகளில், ஆஸ்திரேலிய விவசாய உற்பத்தித் துறையும் பிற தொழில் துறைகளும் சீனாவின் மிகப் பெரிய சந்தையில் இறக்குமதி வரிகள் இல்லாமல் சுதந்திரமாக வியாபாரம் செய்ய இயலும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய வர்த்தகர்களைக் காட்டிலும் ஆஸ்திரேலிய வர்த்தகர்களுக்கு அதிக பயன் ஏற்படும் இந்த திட்டத்தில் சீனாவிற்கும் அதிக இலாபம் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில், சீனா செய்யக்கூடிய முதலீடுகளுக்கு உள்ள கட்டுப்பாடுகள், புதிய ஒப்பந்தம் காரணமாக நீக்கப்படும். முன்னதாக கேன்பெர்ராவில் உள்ள ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சீன அதிபர், சீனாவின் தேசிய வருமானத்தை 2020-க்குள் இரண்டு மடங்காக அதிகரிப்பதற்கான பல்வேறு திட்டங்களை மேலோட்டமாக விளக்கியிருந்தார்.

சீனா-ஆஸ்திரேலியா இடையே ஏற்பட்டுள்ள இந்த வரலாற்று ஒப்பந்தம் பற்றி பொது நோக்கர்கள் கூறுகையில், “சீனா-ஆஸ்திரேலியா இடையே ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆஸ்திரேலியாவை விட சீனாவிற்கே இந்த புதிய ஒப்பந்தத்தால் அதிக பலன் ஏற்படும்” என்று கூறியுள்ளனர்.