Home நாடு “என் மீது பழிபோட வேண்டாம்” – பழனிவேல்

“என் மீது பழிபோட வேண்டாம்” – பழனிவேல்

572
0
SHARE
Ad

g-palanivel_mic-300x198கேமரன்மலை, நவம்பர் 22 – அண்மையில் கேமரன் மலையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு தொடர்பில் தன்னைக் குற்றம்சாட்டுவது சரியல்ல என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சரும் கேமரன் மலை நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ பழனிவேல் கூறியுள்ளார்.

கேமரன் மலையின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பழனிவேலுவின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் குறித்து கடந்த புதன்கிழமை கேமரன் மலைக்கு வருகை புரிந்த பகாங் சுல்தான் கண்டனம் தெரிவித்திருந்தார்.

பகாங் சுல்தான் வருகையின்போது பழனிவேலு உடன் வரவில்லை என்பதும் பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகியது.

#TamilSchoolmychoice

“தனது துறைக்குப் பொறுப்பேற்று ஓராண்டு மட்டுமே நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது நிகழ்ந்த இயற்கைச் சீற்றத்தால் ஆன விளைவுகளுக்கு தன்னைப் பொறுப்பேற்கும்படி சிலர் கூறுவது நியாயமற்றது” என பழனிவேலு தெரிவித்துள்ளார்.

“கேமரன் மலையில் 30 ஆயிரம் வங்கதேசத்தவர்கள் இருப்பதாகக் கூறுவது தவறான தகவல். மிகைப்படுத்தி சிலர் தெரிவிப்பதை ஏற்க இயலாது. கேமரன் மலை சம்பவம் தொடர்பாக விரைவில் பிரதமரைச் சந்தித்து விளக்கம் அளிப்பேன்,” என்று பழனிவேலு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே கேமரன் மலையில் 30 ஆயிரம் வங்கதேசத்தவர்கள் இருப்பதாகக் கூறப்படுவது சரியல்ல என பகாங் சுல்தான் அகமட் ஷா கூறியுள்ளார்.

இதுபோன்ற தகவல்களை வெளியிடும் முன்னர் அவை சரிதானா ஊடகங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.