Home உலகம் ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபராக வேண்டும் – ஒபாமா விருப்பம்

ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க அதிபராக வேண்டும் – ஒபாமா விருப்பம்

535
0
SHARE
Ad

obamaவாஷிங்டன், நவம்பர் 26 – ஹிலாரி கிளிண்டன் அமெரிக்காவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டின் மிகச் சிறந்த அதிபர்களில் ஒருவராக அவர் திகழ்வார். எனவே அவர் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று ஒபாமா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ள நிலையில், ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் போட்டியிடலாம் என்று தெரிய வருகின்றது. ஒபாமா இரண்டாவது முறையாக அதிபர் பதவியில் இருப்பதால், அவரால் இனி அதிபர் பதவிக்கு போட்டியிட முடியாது. அதன் காரணமாகவே ஹிலாரி அவரது கட்சியில் முன்னிறுத்தப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்க தேசிய தொலைக்காட்சிக்கு அதிபர் ஒபாமா பேட்டி ஒன்றின் போது ஹிலாரி பற்றி கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“ஜனநாயகக் கட்சியில் அதிபர் பதவிக்கு பொருத்தமாகப் பலர் உள்ளனர். எனினும் அவர்களில், ஹிலாரி கிளிண்டன் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட்டால் மிகச் சிறப்பானதாக இருக்கும். ஒருவேளை அவர் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் மிகச் சிறந்த அமெரிக்க அதிபர்களில் ஒருவராக திகழ்வார். அமெரிக்க ஜனநாயக அரசியலில் ஹிலாரி பல ஆண்டுகளாக வலுவான சக்தியாகத் திகழ்கிறார்.”

“எனினும் ஹிலாரி பல விஷயங்களில் என்னிடம் இருந்து மாறுபட்ட கருத்தை கொண்டவர். ஜனநாயக கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் போட்டியில் நாங்கள் இருவரும் இருந்தபோது, எங்கள் கொள்கைகள், செயல்திட்டங்களில் எத்தகைய மாறுபாட்டையும் கொண்டிருக்காமல் உறுதியாக இருந்தோம்” என்று அவர் கூறியுள்ளார்.