Home இந்தியா கருப்பு பண விவகாரம்: 427 பேரின் அடையாளம் தெரிந்தது – அருண் ஜேட்லி!

கருப்பு பண விவகாரம்: 427 பேரின் அடையாளம் தெரிந்தது – அருண் ஜேட்லி!

437
0
SHARE
Ad

arunjaitleyடெல்லி, நவம்பர் 27 – வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கிய 627 பேரில் 427 பேரின் வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் கருப்புப் பணம் மீதான விவாதத்தின் மீது பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கருப்புப் பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிடுங்கள்.

கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வருவது தொடர்பாக எத்தனை நாடுகளுடன் பிரதமர் பேசி உள்ளார் என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

மேலும் கருப்புப் பணத்தை மீட்டு கொண்டு வருவோம் என்று பாஜக கூறிய பொய்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி, கருப்புப் பணம் மீட்கப்பட்டால் ஒவ்வொரு இந்தியரின் கணக்கிலும் ரூ.15 அல்லது ரூ.20 லட்சம் பணம் வைக்க முடியும் என்றும் கூறியது குறித்தும் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாகத் தாக்கி பேசினர்.

இதற்கு பதிலளித்து நாடாளுமன்றத்தில் அருண் ஜேட்லி பேசியதாவது; “அயல்நாட்டில் இந்தியர்கள் வைத்துள்ள கணக்குகளில் அடையாளம் காணப்பட்ட 427 கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன.”

“இதில் கணக்கு வைத்துள்ள 250 பேர் தங்களது அயல்நாட்டு வங்கிக் கணக்குகள் பற்றி ஒப்புக் கொண்டுள்ளனர். அடுத்த சில வாரங்களில் மேலும் சில அரசு தரப்பு வழக்குகள் தொடரப்படுகிறது”.

“விசாரணைக்கு இந்த வழக்கு வரும்போது பெயர்கள் தானாக வெளியாகும். கருப்புப் பண விவகாரத்தில் நாங்கள் மிகவும் கவனமுடன் இருந்து வருகிறோம்” என்றார் அருண் ஜேட்லி.