Home நாடு தேச நிந்தனைச் சட்டம் நீடிக்கப்பட்டது ஏன் – நஜிப் விளக்கம்

தேச நிந்தனைச் சட்டம் நீடிக்கப்பட்டது ஏன் – நஜிப் விளக்கம்

610
0
SHARE
Ad

najib

கோலாலம்பூர், நவம்பர் 29 – தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படுமா? அல்லது நீடிக்கப்படுமா? என்பது குறித்து தொடர்ந்து நடைபெற்று வந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளியாக அச்சட்டம் அகற்றப்படாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அறிவித்துள்ளது எதிர்கட்சியினரிடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்கட்சித் தலைவர் அன்வார் தொடங்கி ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் தெராசா கோக் வரை நஜிப்புக்கு எதிராக கருத்துகள் தெரிவித்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

நஜிப் பொதுத்தேர்தலின் போது தேச நிந்தனைச் சட்டத்தை நீக்குவதாகக் கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டதாக எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான மஇகா, இச்சட்டம் நீடிக்கப்படுவது குறித்து கட்சியிடம் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் அனைத்துலக புத்ரா வாணிப மையத்தில் நடைபெற்ற அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றிய நஜிப், தேச நிந்தனைச் சட்டம் அகற்றப்படாததற்கான இரண்டு காரணங்களை முன் வைத்தார்.

தேச நிந்தனைச் சட்டம் தொடர்ந்து நீடிக்கப்படுவதால் இஸ்லாமின் புனித தன்மை பாதுகாக்கப்படும் என்றும், மலேசியாவில் இருந்து சபா, சரவாக்கை பிரிக்க நினைப்பவர்களுக்கு எதிராக இந்த சட்டத்தின் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நஜிப் குறிப்பிட்டார்.

மேலும், மலேசியா ஒரு அமைதியான நாடாக தொடர்ந்து இருப்பதற்கு இந்த சட்டம் உறுதுணையாக இருக்கும் என்றும் நஜிப் தெரிவித்தார்.