Home உலகம் ஹாங்காங் போராட்டத் தலைவர்கள் காவல் துறையினரிடம் சரண்!

ஹாங்காங் போராட்டத் தலைவர்கள் காவல் துறையினரிடம் சரண்!

592
0
SHARE
Ad

Hong Kong police arrest pro-democracy protestorsஹாங்காங், டிசம்பர் 4 – ஹாங்காங்கில், சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து, ஜனநாயக ஆதரவுப் போராட்டம் தொடங்குவதற்குக் காரணமாக இருந்த ‘ஆக்குபை சென்ட்ரல்’ அமைப்பின் தலைவர்கள் காவல் துறையினரிடம் சரணடையப் போவதாக அறிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் ஹாங்காங்கின் அரசியல், ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களிலும் சீனா தொடர்ந்து தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது.

இதனை பொறுத்துக் கொள்ளாத பென்னி தாய், சான் கின்-மான், சூ யூ-மிங் ஆகிய மூவரும், ஹாங்காங்கில் ஜனநாயக சீர்த்திருத்தத்தை வலியுறுத்தி கடந்த ஆண்டு தொடக்கத்தில் ‘ஆக்குபை சென்ட்ரல்’ என்ற அமைப்பை தொடங்கி ஒத்துழையாமை இயக்கத்தை முன்னின்று நடத்தி வந்தனர்.

#TamilSchoolmychoice

இவர்களின் போராட்டத்தில் ஹாங்காங் மாணவர் குழுக்களும் இணைந்ததால் அங்கு அது பெரும் போராட்டமாக மாறி, சீனாவிற்கு கவலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜனநாயகத்துக்கான போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பொருட்டு, இவர்கள் காவல்துறையினரிடம் சரணடையப் போவதாக அறிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த அமைப்பினர் கூறியதாவது: “ஹாங்காங் அரசின் இரக்கமற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காகவே, நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். சரணடைவதால் நாங்கள் கோழைகள் என்று அர்த்தமல்ல” என்று அவர்கள் கூறியுள்ளார்.