Home உலகம் மாலத்தீவிற்கு 5 விமானங்களில் குடிநீர் அனுப்பிய இந்தியா!

மாலத்தீவிற்கு 5 விமானங்களில் குடிநீர் அனுப்பிய இந்தியா!

804
0
SHARE
Ad

Maldives location Mapமாலே, டிசம்பர் 10 – இந்தியாவின் பல பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் தண்ணீர்ப் பஞ்சம் பற்றி விரிவாக எழுத வேண்டியதில்லை. ஆனால், ஓர் அதிசயமாக அண்மையில் மாலத்தீவில் ஏற்பட்ட குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு இந்தியா, 5 விமானங்களில் குடிநீரை அனுப்பி உள்ளது.

மாலத்தீவின் தலைநகரான மாலேவில் செயல்பட்டு வந்த தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக, அந்த நகரில் வசிக்கும் பல லட்சம் குடும்பத்தினர் குடி தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். மேலும், குடிநீர் தேவையின் தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து மக்கள், தீவிர போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.

தீ விபத்தால் பாதிக்கப்பட்ட தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள உதிரி பாகங்கள், வெளிநாடுகளில் இருந்து வரவேண்டி இருப்பதால், அங்கு நிலைமை மேலும் மோசமடைந்து வருகின்றது.

#TamilSchoolmychoice

இந்த நிலை கட்டுக்கடங்காமல் போய்கொண்டிருப்பதால், மாலத்தீவு அரசு இந்தியா, இலங்கை, சீனா மற்றும அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் உதவி கேட்டது. அதனைத் தொடர்ந்து, இந்திய தூதர் ராஜிவ் சகாரேவின் மேற்பார்வையில், இந்தியாவிலிருந்து ஐந்து விமானங்கள் மூலம் தண்ணீர் அனுப்ப, இந்தியா அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.

அதில் முதல் விமானம் ஐ.எல். 76 குடிநீரை ஏற்றிக்கொண்டு ஏற்கனவே மாலத்தீவில் தரையிறங்கியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை தொடர்பாளர் சையது அக்பருதீன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.