Home உலகம் அமெரிக்காவின் புதிய இராணுவ அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் – ஒபாமா அறிவிப்பு!

அமெரிக்காவின் புதிய இராணுவ அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டர் – ஒபாமா அறிவிப்பு!

518
0
SHARE
Ad

secvpவாஷிங்டன், டிசம்பர் 6 – அமெரிக்காவின் புதிய இராணுவ அமைச்சராக ஆஷ்டன் கார்ட்டர் நியமிக்கப்பட இருப்பதாக அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் தலைமையில் செயல்பட்டு வந்த அமைச்சரவையில், இராணுவ அமைச்சராக பணியாற்றி வந்தவர் குடியரசு கட்சியின் மூத்த தலைவர் சக் ஹேகல்.

அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளிலும், ஈராக் மற்றும் சிரியாவில் அதிகரித்து வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஒபாமாவிற்கும், சக் ஹேகலுக்கும் முரண்பாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சக் ஹேகல், கடந்த 24-ந் தேதி பதவி விலகினார்.

#TamilSchoolmychoice

இதையடுத்து புதிய இராணுவ அமைச்சர் பதவிக்கு பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், முன்னாள் இராணுவ துணை அமைச்சராக பணியாற்றிய ஆஷ்டன் கார்ட்டர், புதிய இராணுவ அமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக ஒபாமா அறிவித்துள்ளார்.

ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆஷ்டன் கார்ட்டர், 2011-2013-ம் ஆண்டுகால கட்டத்தில், இராணுவத் துணை அமைச்சராக சிறப்பாக பணிபுரிந்துள்ளார் என்று கூறப்படுகின்றது.