Home வணிகம்/தொழில் நுட்பம் ‘சுப்ரிமா எஸ் ஸ்டாண்டர்ட்’ கார்களை அறிமுகப்படுத்தியது புரோட்டோன்!

‘சுப்ரிமா எஸ் ஸ்டாண்டர்ட்’ கார்களை அறிமுகப்படுத்தியது புரோட்டோன்!

597
0
SHARE
Ad

Proton Suprima S Launchedகோலாலம்பூர், டிசம்பர் 7 – நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ‘புரோட்டோன்’ (Proton) நேற்று தனது புதிய ‘சுப்ரிமா எஸ் ஸ்டாண்டர்ட்’ (Suprima S Standard) கார்களை அறிமுகப்படுத்தியது. குறைந்த விலையில் (69,438 ரிங்கெட்டுகள்), மலேசிய மக்களின் வர்த்தக எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு இந்த புதிய ரக கார் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ரக கார்கள் குறித்து புரோட்டான் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ அப்துல் ஹரித் அப்துல்லா கூறுகையில், “இந்த சுப்ரிமா எஸ் ஸ்டாண்டர்ட் கார்களின் அறிமுகம், மலேசிய மக்களுக்கு மலிவு விலையில் சிறந்த கார்களை கொடுக்க வேண்டும் என்ற எங்கள் நிறுவனத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கின்றது. புரோட்டான் கார்கள் எப்பொழுதும் குறைந்த விலையில் நிறைந்த வசதிகளைக் கொண்டிருக்கும். அந்த வகையில் இந்த புதிய ரக கார்களும் மலேசியர்களைக் கவரும்” என்று அவர் கூறியுள்ளார்.

5 சிறப்பான வண்ணங்களுடன், 150,000 கி.மீ பயணம் அல்லது 5 வருடங்கள் என்ற உத்தரவாதத்துடன் வெளியாகி உள்ள இந்த கார்கள், அடுத்த நிதியாண்டில் புரோட்டான் ரக கார்கள் விற்பனையில் முன்னிலை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

சுப்ரிமா எஸ் ஸ்டாண்டர்ட் கார்களின் சிறப்பு அம்சங்கள்:

1.6 லிட்டர் டர்பொ எஞ்சினில், அட்டகாசமான ‘செவன் ஸ்பீட் ப்ரோ டோனிக் சிவிடி’  (Seven-Speed ProTonic CVT)-ஐ கொண்டுள்ள இந்த கார்கள், குறைந்த பெட்ரோல் பயன்பாட்டில் சிறந்த ஆற்றலைக் கொடுக்கும் என்று கூறப்படுகின்றது.

16-அங்குல அலாய் சக்கரங்கள்,  பவர் ஸ்டீயரிங் மற்றும் பயனர் பாதுகாப்பிற்கான இரு ஏர் பேக்குகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

இந்த கார்கள் மலேசியாவின் கிழக்கு பகுதிகளுக்கு எதிர்வரும் 18-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.