Home நாடு மிட்சுபிஷி தலைமைச் செயல் அதிகாரி விபத்தில் பலி

மிட்சுபிஷி தலைமைச் செயல் அதிகாரி விபத்தில் பலி

656
0
SHARE
Ad
Mitsubishi CEO Oda
மிட்சுபிஷி தலைமை செயல் அதிகாரி டெட்சுயா ஓடா

கோலாலம்பூர், டிசம்பர் 7 – மிட்சுபிஷி மோட்டார் (மலேசியா) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டெட்சுயா ஓடா (படம்) வியாழக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் பலியானார்.
49 வயதான ஓடா அன்று காலை கேலரியா ஹர்த்தாமாஸ் நோக்கிச் செல்லும் ஒரு வழி சாலையில் மெது ஓட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர் மீது ஒரு டன் எடை கொண்ட லோரி ஒன்று மோதியது.

காலை 6.50 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்தது என்றும், லோரி வருவதை ஓடா கவனிக்கவில்லை என்றும் கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணைப் பிரிவு துணை கண்காணிப்பாளர் மார்க்கண்டன் சுப்ரமணியம் தெரிவித்தார்.

விபத்துக்குப் பின்னர் உடனடியாக மலாயா பல்கலைக்கழக மருத்துவ மையத்துக்கு கொண்டு செல்லப்பட்ட ஓடா, விபத்து நடந்த அன்று காலை 9.35 மணிக்கு இறந்துவிட்டார் என அறிவிக்கப்பட்டது.