Home வணிகம்/தொழில் நுட்பம் பேஸ் புக்கின் மார்க் சக்கர்பெர்க் மலேசிய இளைஞர்களிடம் உரையாட அழைப்பு

பேஸ் புக்கின் மார்க் சக்கர்பெர்க் மலேசிய இளைஞர்களிடம் உரையாட அழைப்பு

601
0
SHARE
Ad
Mark Zuckerberg
மார்க் சக்கர்பெர்க்

கோலாலம்பூர், டிசம்பர் 7 – சமூக வலைத் தளங்கள் மற்றும் மின்-வணிகம் (e-commerce) குறித்து மலேசிய இளைய தலைமுறையினரிடம் பேச வருமாறு ஃபேஸ் புக் தோற்றுவிப்பாளர்களில் ஒருவரான மார்க் சக்கர்பெர்க்குக்கு மசீசவின் இளைஞர் பிரிவு அழைப்பு விடுத்திருக்கிறது.

அப்பிரிவின் தலைவரான சோங் சின் வூன் இது தொடர்பாக சக்கர்பெர்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அடுத்த ஆண்டு மலேசியாவிற்கு வருகை புரிந்து தனது அனுபவம் மற்றும் ஆற்றலை மலேசிய இளைஞர்களுடன் சக்கர்பெர்க் பகிர்ந்துகொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

“சக்கர்பெர்க் ஏற்கெனவே இந்தோனேசியாவிற்கு சென்றுள்ளார். எனவே அவர் மலேசியாவுக்கும் வருகை புரிவார் என கருதுகிறோம். எனினும் அவரது பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்றார் சோங் சின் வூன்.

#TamilSchoolmychoice

மின்-வணிக முறையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், இவ்வணிகத்தை பிரபலப்படுத்த நாடு தழுவிய அளவில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.