Home நாடு மலேசியாவுக்கு பாடம் நடத்த வேண்டாம் – அமெரிக்காவுக்கு நஸ்ரி எச்சரிக்கை

மலேசியாவுக்கு பாடம் நடத்த வேண்டாம் – அமெரிக்காவுக்கு நஸ்ரி எச்சரிக்கை

626
0
SHARE
Ad

nazri-tahun-melawat-malaysiaகோலாலம்பூர், டிசம்பர் 7 – சட்ட ஆட்சிமுறை குறித்து மலேசியாவுக்கு அமெரிக்கா பாடம் நடத்தத் தேவையில்லை என சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ  நஸ்ரி அசீஸ் தெரிவித்துள்ளார்.

தங்கள் நாட்டில் நிலவும் இனப் பாகுபாடுகளை அமெரிக்கா முதலில் களைய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேச நிந்தனைச் சட்டம் குறித்தும், எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் குறித்தும் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடேன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார். இதற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

#TamilSchoolmychoice

“தங்கள் கொல்லைப்புறத்தில் என்ன நடக்கிறது என்பதில் அமெரிக்கா முதலில் அக்கறை கொள்ளட்டும். மாறாக பிறர்க்கு பாடம் நடத்த வேண்டாம். மலேசியாவின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும்,” என்று நஸ்ரி கூறியுள்ளார்.

மலேசிய நீதித்துறையில் தலையிடுவது, மலேசியா என்ன செய்ய வேண்டும் என அறிவுறுத்துவது ஆகியவற்றை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

மலேசியாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தொடர்ந்து தலையிட்டால் அந்த நாட்டுடனான உறவை துண்டித்துக் கொள்ள மலேசியா தயங்காது என்றும் நஸ்ரி எச்சரித்துள்ளார்.

“தேச நிந்தனைச் சட்டம் தொடர்பில் மலேசியா அரசு எடுத்துள்ள முடிவை மாற்றும் விதமாக அமெரிக்க துணை அதிபர் கட்டாயப்படுத்தக்கூடாது. பல்வேறு இனங்கள் வாழும் மலேசியாவில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்த தேச நிந்தனைச் சட்டம் உதவுகிறது,” என்றார் நஸ்ரி.