வாஷிங்டன், பிப். 27- அமெரிக்காவின் தற்போதைய ராணுவ மந்திரியாக லியோன் பனெட்டா இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
இவருக்கு அடுத்த ராணுவ மந்திரியாக, வியட்னாம் போரில் பங்கேற்றவரான சக் ஹகெலை நியமிக்க பராக் ஒபாமா மும்மொழிந்தார்.
அவரின் பரிந்துரைக்கு, அமெரிக்காவின் முக்கிய செனட் சபையில் எதிர்கட்சியான குடியரசு கட்சி நேற்று ஒப்புதல் வழங்கியது. விரைவில் செனட் சபையின் முழு ஒப்புதலையும் அவர் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிறகு அவர் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனின் தலைவராக மாறுவார். கடந்த 2011-ம் ஆண்டு இந்தியாவிற்கு எதிராக பேசியவரான, சக் ஹகெல் முன்னாள் குடியரசு கட்சியின் சபை உறுப்பினராவார்.