சென்னையில் இரவு நடந்த விருந்து நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஜெய் ராயப்பேட்டையில் உள்ள சாலையில் காரை ஓட்டிச் சென்றார். அப்போது வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசார் ஜெய் குடித்து இருப்பது தெரிந்து அவருக்கு அபராதம் விதித்தனர்.
அப்போது அப்பகுதியில் இருந்தவர்கள் ஜெய்யை அடையாளம் கண்டனர். அவரை புகைப்படம் எடுக்க முண்டியடித்தார்கள். குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் அவர் சிக்கியதையும் தெரிந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Comments