Home நாடு கோலாலம்பூரிலும் பெஷாவாரில் பலியானவர்களுக்கு அஞ்சலி!

கோலாலம்பூரிலும் பெஷாவாரில் பலியானவர்களுக்கு அஞ்சலி!

492
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 20 – கடந்த டிசம்பர் 16ஆம் தேதி பெஷாவார் இராணுவப் பள்ளியில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அந்த சம்பவத்தில் பலியானவர்களுக்காக நேற்று கோலாலம்பூரில் உள்ள பாகிஸ்தானிய தூதரகத்திற்கு வெளியே பாகிஸ்தானிய வம்சாவழி மக்கள் ஒரு குழுவாக நேற்று அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை நடத்தினர்.

 Pakistani men offer prayers during a vigil to pay respect for the victims of the 16 December Taliban attack in Peshawar, Pakistan, outside of the Embassy of Pakistan in Kuala Lumpur, Malaysia, 19 December 2014. A total of 148 people, the vast majority children, and not including the seven assailants, were killed at a military-run school in Peshwar, Pakistan, on 16 December in an attack by Taliban militants. Seen in background are the illuminated 378 meters landmark Petronas Twin Towers.  EPA/AZHAR RAHIM

பிரார்த்தனை நடத்தும் குழுவினரின் பின்னணியில் தெரிவது கோலாலம்பூரில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடங்களுள் ஒன்றான பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுரங்களாகும்.

#TamilSchoolmychoice

இந்தத் தாக்குதலில் இதுவரை 148 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையோர் பள்ளிக் குழந்தைகளாவர். தாக்குதல் நடத்திய 7 தீவிரவாதிகளும் இந்த சம்பவத்தில் மரணமடைந்தனர்.

படம்: EPA