Home வாழ் நலம் மூல நோயை குணமாக்கும் வெங்காயம்!

மூல நோயை குணமாக்கும் வெங்காயம்!

2609
0
SHARE
Ad

onnianடிசம்பர் 22 – வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும்.

வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்னும் அமிலமாகும்.

இதுவே வெங்காயத்தின் நெடிக்கும்,  வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.

#TamilSchoolmychoice

வெங்காயத்தின் பயன்கள்:

chatni1நெஞ்சு படபடப்பு: 

நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்சனைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

மூல நோய்:

மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் மூல நோய் குணமாகும்.

* வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

onion* தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.

* வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து  வாயுத்தொல்லை காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய்  குறையும்.

* வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.