Home உலகம் மும்பை தாக்குதலுக்கு தீவிரவாதிகள் கூகுள் எர்த்தை பயன்படுத்தினர் – நியூயார்க் டைம்ஸ்!

மும்பை தாக்குதலுக்கு தீவிரவாதிகள் கூகுள் எர்த்தை பயன்படுத்தினர் – நியூயார்க் டைம்ஸ்!

772
0
SHARE
Ad

Google Earthநியூயார்க், டிசம்பர் 23 -மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ‘கூகுள் எர்த்’ (Google Earth) மேப் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2008-ம், செப்டம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு தாக்குதலை நடத்தினர்.

166 அப்பாவிகள் கொல்லப்பட்ட இந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகளுக்கு நடுவே நடைபெற்ற கருத்து பரிமாற்றங்கள் குறித்து அமெரிக்காவின் முன்னாள் உளவாளி ஸ்னோடன் வெளிக்கொண்டு வந்தார்.  அதை அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதில், “மும்பையில் 10 தீவிரவாதிகளை அனுப்பி தாக்குதலை நடத்த லஷ்கர் இ தொய்பா முடிவு செய்தவுடன், அந்த அமைப்பின் தொழில்நுட்ப பிரிவு தலைவன் ஜரார் ஷாவிடம் தீவிரவாதிகள் 10 பெரும் தொழில்நுட்ப பயிற்சி பெற்றள்ளனர்”.

“அப்போது அவர்கள் மும்பை வழித்தடங்களை கூகுள் எர்த் வழியாக தெரிந்து கொண்டுள்ளனர். மேலும், ஜரார் ஷாவின் நடவடிக்கைகளை இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் தாக்குதலுக்கு முன்பிருந்தே கண்காணித்து வந்துள்ளன”.

“எனினும், அந்நாடுகளின் உளவு அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்படாததால், தீவிரவாதிகள் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினர்” என்று அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது.