Home இந்தியா கிரிக்கெட் உலகக்கிண்ணம் 2015-ன் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!

கிரிக்கெட் உலகக்கிண்ணம் 2015-ன் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்!

802
0
SHARE
Ad

Sachin Tendulkarபுதுடெல்லி, டிசம்பர் 23 – கிரிக்கெட் 2015 உலகக்கிண்ணப் போட்டிக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அனைத்துலக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

11-வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இரு நாடுகளிலும் 14 இடங்களில் மொத்தம் 49 போட்டிகள் நடைபெற உள்ளன.

இப்போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளுக்கு தூதராக சச்சின் டெண்டுல்கரை நியமித்த அனைத்துலக கிரிக்கெட் வாரியம், இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டது.

#TamilSchoolmychoice

சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது முறையாக இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். 2011-ஆம் ஆண்டு இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகள் நடத்திய உலகக்கிண்ணப் போட்டியில் தூதுவராக சச்சின் டெண்டுல்கர் இருந்தார்.