Home இந்தியா இந்திய வட மாநிலங்களில் கடுமையான குளிரால் 160 பேர் பலி!

இந்திய வட மாநிலங்களில் கடுமையான குளிரால் 160 பேர் பலி!

542
0
SHARE
Ad

delhi11டெல்லி, டிசம்பர் 29 – இந்திய வட மாநிலங்களில் குளிர் கடுமையாகி, மைனஸ் 17 டிகிரியாக மாறிவிட்டதால், 160 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

காஷ்மீர், இமாசலபிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக குளிர் மிகவும் அதிகமாக இருக்கிறது.

கடுமையான குளிர் மற்றும் பனிக்காற்றின் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

குளிர் வாட்டி வதைக்கும் காஷ்மீர் மாநிலத்தில் பனிக்காற்றும் வீசுகிறது. லே பகுதியில் நேற்று வெப்பநிலை மைனஸ் 17 டிகிரி செல்சியாக இருந்தது. கார்கில் பகுதியில் மைனஸ் 15.2 டிகிரி செல்சியசாக இருந்தது.

தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி உறைந்து விட்டது. இதேபோல் இந்திய மாநிலத்தில் பல இடங்களில் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உள்ள தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாகி விட்டது.

jammu_2250900fகுளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகர்-லே தேசிய நெடுஞ்சாலை கடந்த 17-ஆம் தேதி முதல் மூடப்பட்டு உள்ளது. டெல்லியில் நேற்று காலை 8.30 அளவில் வெப்பநிலை, 2.6 டிகிரி செல்சியசாக குறைந்தது.

50 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களைக் கூட காண முடியாத அளவுக்கு காலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

55 விமான சேவைகள் தாமதமாகின. வெளிநாடுகளில இருந்து டெல்லி வந்த 3 விமானங்கள் வேறு ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. டெல்லியில் காலையில் கடுமையான பனிமூட்டம் நிலவியதால் 70 ரெயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலத்தில் குளிர் தாங்காமல் நேற்று ஒரு நாளில் மட்டும் 21 பேர் உயிர் இழந்தனர். இவர்களையும் சேர்த்து அந்த மாநிலத்தில் இதுவரை குளிருக்கு பலியானோர் எண்ணிக்கை 160 ஆக உயர்ந்து உள்ளது.

அங்கும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசத்திலும் வெப்ப நிலை 1 டிகிரி வரை போய்விட்டதால் மக்கள் அவதி படுகின்றனர்.