Home வாழ் நலம் இரைப்பை புற்றுநோயை குணப்படுத்தும் பூண்டு!

இரைப்பை புற்றுநோயை குணப்படுத்தும் பூண்டு!

719
0
SHARE
Ad

poonduடிசம்பர் 29 – பூண்டு என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வருவது, இதயம் காக்கும், கொழுப்பைக் கரைக்கும் சிறந்த உணவுப் பொருள் என்பதுதான்.

பூண்டுக்கு இந்தச் சிறப்பு மட்டுமல்ல, மேலும் ஏராளமான தாராளமான மருத்துவக் குணங்கள் பூண்டுக்குள் உறைந்திருக்கின்றன. வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அலைல் சல்பைடு என்னும் வேதிப்பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

குறிப்பாக இரைப்பை புற்றுநோயை பூண்டு தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பூண்டில் உள்ள வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

#TamilSchoolmychoice

p63a10தினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில், உடலில் நச்சுகள் சேராமல் தடுப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது.

மாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்சனைகளில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது.  இதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.

அதுமட்டுமின்றி, கொழுப்பை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு. பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பொருட்கள், தொண்டை பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கிறது.

punduuதொண்டை எரிச்சல்களைக் குணப்படுத்துவதுடன், சுவாசப் பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது. மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண குணங்கள் பல்வலிக்கு நிவாரணம் அளிக்கின்றன. அதேவேளையில் பூண்டை பச்சையாகச் சாப்பிட்டால், ஈறுகளில் சிறிது எரிச்சலை உண்டாக்கும் என்பதும் ஞாபகமிருக்கட்டும்.