Home உலகம் அமெரிக்காவை தாக்கும் கடல்வழி அணு ஆயுதங்களைத் தயாரித்த சீனா! 

அமெரிக்காவை தாக்கும் கடல்வழி அணு ஆயுதங்களைத் தயாரித்த சீனா! 

546
0
SHARE
Ad

china_and_us_flagபெய்ஜிங், டிசம்பர் 29 – அமெரிக்காவை எந்த நேரத்திலும் தாக்க ஏவுகணைகளை மட்டும் தயார் செய்து வந்த சீனா, தற்போது கடல் வழியாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தவும் தயாராகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக அமெரிக்க-சீனா பாதுகாப்பு மறு-ஆய்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

“நிலவழித் தாக்குதல் தொடுக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா வெகு சுலபமாக அடையாளம் கண்டு முதல் ஏவுதலிலேயே முறியடிக்கும் திறன் கொண்டுள்ளது. இதனை நன்கு உணர்ந்துள்ள சீனா, தற்போது எளிதில் அழிக்க முடியாத கடல்வழி அணு ஆயுதத் தாக்குதலுக்கான தயாரிப்பு முயற்சியில் இறங்கியுள்ளது.”

#TamilSchoolmychoice

“ஜே.எல்.2 ஏவுகணைகளை, சீனா கடல் வழியாக தயார் நிலையில் வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றது. இந்த ஏவுகணைகள் சுமார் 7,350 கிமீ தூரம் சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அணுத்திறன் கொண்ட நீர்மூழ்கிக் கப்பல்களை கடந்த 2007-ம் ஆண்டு சீனா அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானுக்கு தெற்கே கடலிலிருந்து இந்த ஆயுதங்கள் மூலம் தாக்குதல் தொடுத்தால் ஹவாய் பகுதி தாக்குதலுக்கு இலக்காகும். அதன் கிழக்கு கடல் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தினால் அமெரிக்க நாடு முழுவதையும் தாக்க முடியும்.

பசிபிக் கடற்பகுதியில் சீனாவின் சுற்றுப்புற எல்லைகளில் சுமார் 3,60,000 அமெரிக்க கடற்படையினர் நிறுத்தப்பட்டுள்ளதால், சீனாவின் கவலை அதிகரித்துள்ளது. இப்பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் சுமார் 200 கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் தங்கள் நாட்டைக் காத்துக்கொள்ள, சீனா இந்த அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அந்நாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.