Home உலகம் 20,000 பேருக்கு பாதிப்பு; 7000 பேர் பலி – எபோலா கொடூரம்!

20,000 பேருக்கு பாதிப்பு; 7000 பேர் பலி – எபோலா கொடூரம்!

609
0
SHARE
Ad

ebola_847947727ஜெனிவா, ஜனவரி 2 – உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும் 20,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவத் தொடங்கிய இந்த நோய், உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. திடீர் காய்ச்சல், கடுமையான சுகவீனம், தசைவலி, தலைவலி, வறண்ட தொண்டை போன்ற அறிகுறிகள் கொண்ட இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களில் 90 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அறிவியலும், மருத்துவமும் ஒருசேர வளர்ந்துள்ள இந்த காலத்தில், பல்லாயிரம் உயிர்களை பலி வாங்கிய இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டறியப்படவில்லை. அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் நோய் தடுப்பு மருந்துகளை கண்டறிந்ததாக கூறினாலும், அதனை இதுவரை வெற்றிகரமாக செயல்படுத்தியதில்லை.

#TamilSchoolmychoice

மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இந்நோயின் தாக்குதலுக்கு நிறைய பேர் பலியாகி இருப்பதாகவும், கடந்த வாரத்தில் மட்டும் 337 பேருக்கு எபோலாவின் பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிலும் குறிப்பாக அந்நாட்டின் தலைநகர் ஃப்ரீ டவுனில் மட்டும் கடந்த நான்கு வாரத்தில் 149 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுவரை உலகம் முழுவதும் 20,206 பேர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 7,905 பேர் இறந்துள்ளதாக உலக சுகாதார மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.