இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறி பெயரை, ‘அப்துல் ஹாலிக்’ என, மாற்றிக் கொண்டார். துபாயில் தொழிலதிபராக உள்ள கீழக்கரை, சதக் நிஷார் மகள் சப்ரூன் ( 25) என்பவரை திருமணம் செய்வதற்கான நிச்சயதார்த்தம் கடந்த அக்டோபர் மாதம் துபாயில் நடந்தது.
கீழக்கரை அருகே செங்கழுநீர் ஓடை கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பு விருந்தினர் மாளிகையில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. யுவன் சங்கர் ராஜாவுக்கு இது மூன்றாவது திருமணம்.
“மனக்கஷ்டம் ஏற்படும் போது அதில் அமர்ந்து, குரான் படிக்கும் படி கூறினார். அதன்படி செய்த பின் மனதளவில் ஏற்பட்ட மாற்றமே இது” என யுவன் சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
மணப்பெண்ணின் பெற்றோர், ஜமாஅத் நிர்வாகிகள், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரி பவதாரணி, அவரது கணவர் சபரி மற்றும் நெருங்கிய உறவினர் மூவர் என, குறிப்பிட்ட சிலர் மட்டுமே இந்த திருமணத்தில் பங்கேற்றனர் என கூறினார் யுவன் சங்கர் ராஜா.