கெய்ரோ, ஜனவரி 16 – பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து வெளிவரும் சார்லி ஹெப்டோ என்ற வாரஇதழ் முகம்மது நபியின் கார்ட்டூன் படத்தை வெளியிட்டது.
இதையடுத்து, அதன் அலுவலகத்தின் மீது கடந்த 7-ஆம் தேதி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், அதன் ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட் உட்பட 12 பேரை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு, அல்கொய்தாவின் ஏமன் கிளை தற்போது பொறுப்பேற்று உள்ளது. இதுதொடர்பாக, அந்த அமைப்பின் முக்கிய தலைவன் நஸ்ர் அல் அன்சி பேசிய காணொளி, நேற்று இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது.
அதில், முகமது நபி கார்ட்டூன் படத்துக்கு பழிவாங்கும் விதமாக, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று அன்சி கூறியுள்ளான். பிரான்ஸ், சாத்தான்களுக்கு ஆதரவு அளிக்கும் நாடு என்று விமர்சித்துள்ள அன்சி,
அந்நாடு கடும் விளைவுகளை சந்திக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளான். இதற்கிடையே, நேற்று முன்தினம் வெளியான சார்லி ஹெப்டோ இதழின் பதிப்பு, பெருமளவு விற்பனையாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.