Home வாழ் நலம் ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி!

ரத்தத்தை சுத்திகரிக்கும் தக்காளி!

1011
0
SHARE
Ad

Tomatoesஜனவரி 16 – தக்காளி மலச்சிக்கலைப் போக்க கூடியது. ரத்தத்தை சுத்திகரிக்கக் கூடியது. பித்த நீரைச் சுரக்க செய்வது. செரிமானத்தைத் தூண்டக்கூடியது. மருத்துவத்தில் தக்காளியை மூட்டுவலிக்கான மருவத்துவமாக சேர்க்கப்படுகிறது.

சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. உடல் பருமனைக் குறைக்கக் கூடியது, வெள்ளைப் போக்கை குணப்படுத்த வல்லது, ஜலதோஷத்தை தணிக்கக் கூடியது, குளிர்ந்த நிலையை மாற்றவல்லது.

தக்காளி உடலில் பரவி இருக்கும் நாளங்களில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கி சுரப்பிகள் நல்ல வண்ணம் செயல்படத் தூண்டுவது, தக்காளி பித்த நீரைச் சுரக்கச் செய்து செரிமானத்தைத் தூண்டக்கூடியது.

#TamilSchoolmychoice

தக்காளியை பச்சையாக வேக வைக்காமல் சாப்பிடும்போது மலத்தை இளக்கி வெளியேற்ற வல்லது. இதனால் மலச்சிக்கல் தணிகிறது. செயல்தன்மையில் மங்கிப்போன அல்லது கெட்டுப்போன ஈரலையும், சிறுநீரகத்தையும் நன்கு செயல்பட வைத்து ரத்தத்தில் கலந்திருக்கும் தேவையற்ற நச்சுக்களைக் கழுவி வெளியேற்ற உதவுகிறது.

TomatoesOnVine-850x571சர்க்கரை நோயாளிகளுக்குத் தக்காளி மருத்துவர்களாலும், ஆராய்ச்சியாளர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது. “கரோட்டினாய்ட் லைகோபீன்” என்னும் மிக உன்னதமான மருத்துவ வேதிப்பொருள் செரிந்துள்ள முதல்தரமான கனி தக்காளி என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை.

மேற்கண்ட வேதிப்பொருள் உணவு மூலமாக நமக்குக் கிடைக்கிறது என்றால் அது தக்காளிக்கே முதலிடத்தைத் தருகிறது.  தக்காளிச் சாறு வயிற்றில் ஏற்படும் புண்ணை ஏற்படுத்தக் கூடிய காரணியைத் தடுத்து நிறுத்தி குடலில் சாதாரண புண் முதல் புற்று நோய் வரையிலான தொல்லைகளிலிருந்து குடலைக் காக்கிறது.

தக்காளிச்சாறு அருந்துவதால் ரத்தத்தில் உள்ள “சீரம் லைக்கோ பீன்” என்னும் வேதிப் பொருளை அதிகரிக்கச் செய்கிறது.  இதனால் வயிற்றுப் புண்களோ, புற்றோ தவிர்க்கப் பெறுகிறது. மேலும் தக்காளியில் மத்திய நரம்பு மண்டலத்தை நன்னிலையில் வைக்க உதவுவதோடு வலியை குறைக்க கூடியதாகவும் பயன் தருகிறது.

tomatoதக்காளியை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான தலை முடியும், தோலும் அமைவதோடு சக்தியை அதிகரித்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கக் குறைவான உப்புச்சத்து உள்ள உணவு தேவைப்படுகிறது. அதே நேரத்தில் பொட்டாசியம்” சத்து அதிகமாக எடுத்துக் கொள்வது இதய நாளங்களை விரிவடையச் செய்து ரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற உதவுகிறது தக்காளி.

தக்காளியில் உள்ள பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ‘சி’ சத்துக்கள் இதயத்துக்கு பலம் தருவதாகவும் இதய ஓட்டம் சீர்பெற நடப்பதற்கும் உதவுகின்றன. இதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு இதய அடைப்பு போன்ற ஆபத்தான நோய்கள் வராத வண்ணம் பாதுகாக்கப்படுகின்றது.