Home நாடு நிக் அசிஸ் சுயநினைவுக்கு திரும்பினார்!

நிக் அசிஸ் சுயநினைவுக்கு திரும்பினார்!

742
0
SHARE
Ad

Nik Abdul Aziz Nik Matபெட்டாலிங் ஜெயா, ஜனவரி 21 – தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாஸ் ஆன்மீகத் தலைவரும், கிளந்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான டத்தோ நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் மீண்டும் சுயநினைவிற்கு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

குபாங் கெரியனில் உள்ள மலேசிய விஞ்ஞானப்  பல்கலைக்கழக மருத்துவமனைவில் (Universiti Sains Malaysia Hospital) அனுமதிக்கப்பட்டிருந்த நிக் அசிஸ் இன்று காலை கவலைக்கிடமான நிலையில் இருந்து மீண்டதாக அவரது மகன் நிக் அப்டு தெரிவித்துள்ளார்.

மேலும், இன்று காலையில் சுயநினைவுக்கு திரும்பிய நிக் அப்துல் அசிஸ், தேநீர் அருந்துவதற்கு முன்பு தொழுததாகவும், பின்னர் தங்களுடன் உரையாடியதாகவும் பாசிர் மாஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான நிக் அப்டு குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

 

 

 

Comments