Home நாடு 9-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: மலாயாப் பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்குகிறது!

9-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: மலாயாப் பல்கலைக்கழகத்தில் நாளை தொடங்குகிறது!

580
0
SHARE
Ad

samyvellகோலாலப்பூர், ஜனவரி 22 – 9-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கண்காட்சியை நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.15 மணியளவில் டத்தோஸ்ரீ ச.சாமிவேலு தொடக்கி வைக்க இருக்கிறார் என்று மாநாட்டுச் செயலக தலைமைச் செயலாளர் பேராசிரியர் ந.கந்தசாமி வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் தெரிவித்தார்.

நாளை முதல் இரு வாரங்களுக்கு மலாயாப் பல்கலைக்கழக ஆசிய கலை கண்காட்சியகத்தில் இடம் பெறவுள்ள இக்கண்காட்சி காண்போரின் மனதை நூற்றாண்டுக் கணக்கில் பின்னோக்கி அழைத்துச் செல்வதுடன் நம் உள்ளத்தில் தமிழ்-மொழி சார்ந்த உணர்வை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

இதற்கு முன், கோலாலம்பூர், சென்னை, பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர், மொரிஷியஸ், தஞ்சாவூர் என எட்டு இடங்களில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளைப் பற்றிய தகவல்கள்,

#TamilSchoolmychoice

மேலும்,  உலகளாவிய நிலையில் வாழும் தமிழினத்தைப் பற்றிய குறிப்புகள், மற்றும் தமிழ் மக்களின் வரலாறு, மொழி, பண்பாட்டை காப்பதில் மலேசிய தமிழர்களின் ஈடுபாடு குறித்த தகவல்கள் இக்கண்காட்சியில் இடம்பெறும்.

நாளை தொடங்கும் இம்மாநாட்டிலும், 29-ஆம் தேதி நடக்கும் 9-ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிலும் கலந்துகொண்டு ஆதரவளிக்கும்படி மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டனர்.

ஆசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆப்பிரிக்கக் கண்டங்களைச் சேர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள், தமிழ்ச் சான்றோர்கள்  என பலரும் ஒன்று திரளும் இந்த மாநாட்டை மலேசிய உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும், மலாயாப் பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.