Home கலை உலகம் நான்கு நாட்கள் – 11 திரைப்படங்கள் முற்றிலும் இலவசம் – ஜிஎஸ்சி அதிரடி அறிவிப்பு

நான்கு நாட்கள் – 11 திரைப்படங்கள் முற்றிலும் இலவசம் – ஜிஎஸ்சி அதிரடி அறிவிப்பு

670
0
SHARE
Ad

GSC_NS_Schedule_PromoOfferPage_580x920px

கோலாலம்பூர், ஜனவரி 22 – அண்மையில் வெளிவந்து சக்கை போடு போட்ட நடிகர் விஜயின் ‘கத்தி’ மற்றும் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மனை’ ஆகிய இரு படங்களையும் முற்றிலும் இலவசமாக திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டுமா?

வரும் 24 -ம் தேதி முதல் 28 -ம் தேதி வரை 4 நாட்கள் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி, தங்களது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது மலேசியாவின் கோல்டன் திரையரங்கு நிறுவனம் (Golden Screen Cinemas).

#TamilSchoolmychoice

இந்த இரண்டு தமிழ்ப் படங்களைத் தவிர, ‘The Maze Runner’, ‘The book of life (3D)’, ‘Maleficient’, ‘Guardian of the galaxy’, ‘Big hero 6 (3D)’, ‘Left Behind’, ‘Interstellar’, ‘Mana Mau lari’, ‘Don’t go breaking my heart’ என மேலும் 9 படங்களும் நான்கு நாட்கள் இலவசமாகத் திரையிடப்படவுள்ளது.

எதிர்வரும் 29-ம் தேதி, தலைநகர் பிரிக்ஸ்பீட்சிலுள்ள ‘ நியூ சென்ட்ரலில்’ திறக்கப்படவுள்ள கோல்டன் திரையரங்கின் புதிய கிளையை முன்னிட்டு இந்த இலவசத் திரையிடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

என்றாலும், இந்த இலவசத் திரையிட நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுமானால் சில விதிமுறைகள் உள்ளன.

அதனைப் பற்றி முழுவிபரங்களையும் அறிந்து கொள்ள,  http://www.gsc.com.my/Promotions/Upcoming/GSC-Nu-Sentral-free-Screening-from-24-28-Jan/PromoDetails என்ற அகப்பக்கத்தைப் பார்வையிடலாம்.