Home இந்தியா ‘நானும், மோடியும் ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறியவர்கள்’ வானொலியில் ஒபாமா உரை!

‘நானும், மோடியும் ஏழ்மை நிலையில் இருந்து முன்னேறியவர்கள்’ வானொலியில் ஒபாமா உரை!

637
0
SHARE
Ad

US President Barack Obama in Indiaடெல்லி, ஜனவரி 28 – பிரதமர் மோடியுடனான தனது வானொலி உரையில், ‘தாங்கள் இருவரும் ஏழ்மை நிலையிலிருந்து முன்னேறியதை’ நினைவு கூர்ந்தார் அமெரிக்க அதிபர் ஒபாமா.

நாட்டின் 66-வது குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக மூன்று நாள் சுற்று பயணமாக இந்தியா வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

பிரதமர் மோடியுடன் இணைந்து, ஒபாமா பங்கேற்ற ‘மன் கி பாத்’ என்ற வானொலி நிகழ்ச்சி நேற்று அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

சுமார் 35 நிமிடங்கள் ஒலிபரப்பப்பட்ட இந்த பதிவில் அரசியல் வெளிவிவகாரங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேசாமல், தனிப்பட்ட விவகாரம் மற்றும் சமூக விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஒபாமா பேசியதாவது, ” “வானொலி மூலம் மக்களுடன் பேசுவது பெருமையாக உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகள். இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்த பல வரலாற்று சாதனைகள் செய்துள்ளோம்”.

“இந்தியாவில் மோடியின் பணிகளை பார்த்து அமெரிக்க மக்கள் பெருமைப்படுகின்றனர். எனது குழந்தைகள் இந்தியாவால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா வரவும் அவர்கள் ஆசைப்படுகின்றனர். இந்தியாவின் பெருமைப்பற்றி எனது குழந்தைகளிடம் எடுத்து கூறுவேன்”.

“அதிபர் பதவி காலம் முடிந்த பின்னர் எனது குழந்தைகளுடன் இந்தியா வருவேன். தொற்று நோய் பிரச்சனை பற்றி மோடியுடன் பேசினேன். பொதுவான பிரச்சனைகள் பற்றி நானும்மோடியும் பேசினோம்”.

“நானும் மோடியும் ஏழ்மை நிலை பின்னணியிலிருந்து முன்னேறியுள்ளோம். நாட்டு மக்கள் மீது இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நம்பிக்கை உள்ளது” என ஒபாமா வானொலி உரையில் கூறினார்.