Home நாடு 2009-ம் ஆண்டு மத்திய செயற்குழு தலைமைப் பொறுப்பேற்கட்டும் – சுப்ரா

2009-ம் ஆண்டு மத்திய செயற்குழு தலைமைப் பொறுப்பேற்கட்டும் – சுப்ரா

579
0
SHARE
Ad

IMG_7164கோலாலம்பூர், ஜனவரி 29 – மஇகா பிரச்சனைகளை பிரதமருடன் பேசி சுமூகத் தீர்வு காண விதிக்கப்பட்ட காலக்கெடு ஒருபுறம் இருக்க, அதுவரை கட்சி யார் தலைமையில் நடக்கப் போகிறது  என்று துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று மாலை கோலாலம்பூரில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுப்ரமணியம், தற்காலிகமாக கட்சி நிர்வாகத்திற்கு யாராவது பொறுப்பேற்க வேண்டிய தேவையை பிரதமரிடம் தான் எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.

மேலும்,”கடந்த ஜனவரி 24-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், 2009-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தான்  தற்காலிகமாக கட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கான தீர்மானங்களை பிரதமருக்கு அனுப்பி அவரது முடிவை கேட்க வேண்டும்” என்று சுப்ரமணியம் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

2013-ம் ஆண்டு மத்திய செயற்குழு உறுப்பினர்களின் தேர்தல் முடிவுகளை செல்லாது என சங்கங்களின் பதிவிலாகா அறிவித்திருப்பதால், 2009-ம் ஆண்டு மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகத்தை நடத்துமாறு அழைக்கப்படுகின்றார்கள் என்றும் சுப்ரா தெரிவித்தார்.