இன்று மாலை கோலாலம்பூரில் உள்ள பிரபல தங்கும் விடுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சுப்ரமணியம், தற்காலிகமாக கட்சி நிர்வாகத்திற்கு யாராவது பொறுப்பேற்க வேண்டிய தேவையை பிரதமரிடம் தான் எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.
மேலும்,”கடந்த ஜனவரி 24-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், 2009-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயற்குழு உறுப்பினர்கள் தான் தற்காலிகமாக கட்சி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதற்கான தீர்மானங்களை பிரதமருக்கு அனுப்பி அவரது முடிவை கேட்க வேண்டும்” என்று சுப்ரமணியம் தெரிவித்தார்.
2013-ம் ஆண்டு மத்திய செயற்குழு உறுப்பினர்களின் தேர்தல் முடிவுகளை செல்லாது என சங்கங்களின் பதிவிலாகா அறிவித்திருப்பதால், 2009-ம் ஆண்டு மத்திய செயற்குழு உறுப்பினர்கள் கட்சி நிர்வாகத்தை நடத்துமாறு அழைக்கப்படுகின்றார்கள் என்றும் சுப்ரா தெரிவித்தார்.