இது குறித்து விளக்கமளித்துள்ள சரவணன், தான் 2003-ஆண்டு செனட்டர் ஆனது முதல் அரசாங்கத்தின் முறையான அனுமதியுடன் அத்துப்பாக்கியை பாதுகாப்பிற்காக வைத்திருப்பதாகவும், அதன் மூலம் யாருக்கும் எந்த ஒரு காயத்தையும் ஏற்படுத்தியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அன்றைய நாள் தன்னுடைய உடுப்பின் பொத்தான் திறந்து கொண்டதால், துப்பாக்கி இருப்பது வெளியே தெரிந்தது, அதை புகைப்படக்காரர்கள் படமெடுத்துவிட்டார்கள் என்றும் சரவணன் கூறியுள்ளார்.
சில அரசியல் கட்சிகள் அதை வீணாக விளம்பரப் படுத்திவிட்டார்கள் என்றும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை, மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின் போது, செய்தியாளர்கள் முன்னிலையில் சரவணனின் செல்பேசிக்கு மர்ம நபர்களிடமிருந்து கொலைமிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.