Home நாடு மஇகா புதிய தலைமைச் செயலாளர் சோதிநாதன்: பழனிவேல் அறிவிப்பால் புதிய சர்ச்சை

மஇகா புதிய தலைமைச் செயலாளர் சோதிநாதன்: பழனிவேல் அறிவிப்பால் புதிய சர்ச்சை

479
0
SHARE
Ad

sothinathanகோலாலம்பூர், பிப்ரவரி 10 – மஇகாவில் அனைத்து பதவிகளுக்கும் மறுதேர்தல் நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி அறிவித்த சிலமணி நேரங்களிலேயே மஇகாவின் புதிய தலைமைச் செயலாளராக டத்தோ எஸ்.சோதிநாதனை (படம்) நியமித்து அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார் டத்தோஸ்ரீ பழனிவேல்.

கடந்த 2009ஆம் ஆண்டு தேர்வான மத்திய செயலவையே செல்லும் எனவும், மஇகாவிற்கு தற்போது அந்த மத்திய செயலவையே பொறுப்பேற்று, புதிய தேர்தல் நடவடிக்கைக் குழுவை நியமிக்கும் என்றும் உள்துறை அமைச்சரின் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பழனிவேலோ அதற்கு நேர்மாறான நிலைப்பாட்டை எடுத்து சோதிநாதனை நியமித்துள்ளார். எனவே சோதிநாதனின் நியமனம் செல்லுமா, செல்லாதா? என மஇகா விவகாரம் தொடர்பில் மேலும் ஒரு முடிவை எடுக்க வேண்டிய தர்மசங்கடமான நிலை சங்கப் பதிவிலாகாவுக்கு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நேற்று திங்கட்கிழமை உள்துறை அமைச்சரின் அறிக்கை வெளியான பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் பழனிவேல். அதில், இந்தாண்டு ஏப்ரல் தொடங்கி ஜூலைக்குள் மஇகாவின் அனைத்து நிலைகளிலும் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டுமென உள்துறை அமைச்சர் அறிவித்திருப்பதை அவர் குறிப்பிட்டு, மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:-

“மஇகாவில் மறுதேர்தல் நடத்துவது தொடர்பில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதியன்று சங்கப்பதிலாகா அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருந்த விஷயங்களை உள்ளடக்கியதாகவே திங்கட்கிழமை நடைபெற்ற உள்துறை அமைச்சரின் செய்தியாளர் சந்திப்பு அமைந்திருந்தது.”

“கடந்த 2009ல் தேர்வான மத்திய செயலவையைக் கொண்டு மறுதேர்தல் நடத்துவதற்கான இடைக்கால மத்திய செயலவையை அமைக்க வேண்டுமென சங்கப்பதிவிலாகா பரிந்துரைத்துள்ளது. சங்கங்களுக்கான சட்டம் மற்றும் மஇகா அரசியல் சாசனத்தில் இவ்வாறு குறிப்பிடப்படவில்லை என்றாலும், சங்கப்பதிவிலாகாவுடனான விவகாரத்திற்கு சுமுகமான தீர்வைக் காணும் வகையில் மஇகாவில் மறுதேர்தல் நடத்தப்படும்.”

புதிய இடைக்கால மத்திய செயலவை

Palanivel-Sliderஇந்த அடிப்படையில் இடைக்கால மத்திய செயலவையில் இடம்பெறும் 2009ஆம் ஆண்டு மத்திய செயலவை உறுப்பினர்களின் விவரமத்தையும் பழனிவேல் பின்வருமாறு அறிவித்துள்ளார்:

தேசியத் தலைவர் – டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல்

தேசியத் துணைத் தலைவர் – டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம்

உதவித் தலைவர்கள் – டத்தோ எம்.சரவணன், டத்தோ எஸ்.கே.தேவமணி

மத்திய செயலவை உறுப்பினர்கள்:

  1. A. Sakthivel –ஏ.சக்திவேல்
  2. Senator Dato’ Jaspal Singh – செனட்டர் டத்தோ ஜஸ்பால் சிங்
  3. Dato V. S. Mohan – டத்தோ வி.எஸ்.மோகன்
  4. Dato’ M. Davendran – டத்தோ எம்.தேவேந்திரன்
  5. Datuk S. S. Rajagopal – டத்தோ எஸ்.எஸ்.இராஜகோபால்
  6. Dato’ R. Ganesan – டத்தோ ஆர்.கணேசன்
  7. Dato’ S. Ganesan – டத்தோ எஸ்.கணேசன்
  8. Datuk S. Murugesan – டத்தோ எஸ்.முருகேசன்
  9. Datuk R. Moorthy – டத்தோ ஆர்.மூர்த்தி
  10. K. R. Parthiban – கே.ஆர்.பார்த்திபன்
  11. M. Asojan – எம்.அசோஜன்
  12. Dato’ Randhir Singh – டத்தோ ரண்டீர் சிங்
  13. Dato’ K.R.A. Naidu – டத்தோ கே.ஆர்.ஏ.நாயுடு
  14. S. Ananthan – எஸ்.ஆனந்தன்
  15. Datuk M.M. Samy – டத்தோ எம்.எம்.சாமி
  16. S.P. Manivasagam – எஸ்.பி.மணிவாசகம்
  17. Datuk V.M. Panjamothy – டத்தோ வி.எம்.பஞ்சமூர்த்தி
  18. Dato’ A.Ganesan – டத்தோ ஏ.கணேசன்
  19. N. Rawisandran – என்.இரவிச்சந்திரன்
  20. P. Palaniappan – பி.பழனியப்பன்
  21. Mathuraiveran – மதுரை வீரன்
  22. K. P. Samy – கே.பி.சாமி
  23. Dato’ P. K. Subbayah (Deceased) – டத்தோ பி.கே.சுப்பையா (காலமாகிவிட்டார்)

மகளிர் பகுதி மத்திய செயலவை பிரதிநிதிகள்

Datin Paduka K. Komala – டத்தின் படுக்கா கே.கோமளா மகளிர் பகுதி தலைவி

  1. Murukasvary – டி.முருகேஸ்வரி (மத்திய செயலவை பிரதிநிதி)
  2. Mohana – எம்.மோகனா (மத்திய செயலவை பிரதிநிதி)

இளைஞர் பகுதி மத்திய செயலவை பிரதிநிதிகள்

Datuk T. Mohan – டத்தோ டி.மோகன் (இளைஞர் பகுதித் தலைவர்)

  1. Shanmugan – பி.சண்முகம் (மத்திய செயலவை பிரதிநிதி)

Dato’ G. Kumaar Aamaan – டத்தோ ஜி.குமார் அம்மான் (மத்திய செயலவை பிரதிநிதி)

புத்ரா தலைவர் – இல்லை

புத்ரா தலைவி – இல்லை

புதிய நியமன உறுப்பினர்கள் – பொறுப்பாளர்கள் நியமனம்

MIC-logoமேலும், மஇகா அரசியல் சாசனத்தின் 46.5 ஆவது பிரிவின் கீழ், கட்சித் தலைவர் என்ற முறையில் வழங்கப்பட்டுள்ள முழு அதிகாரங்களின்படி இடைக்கால மத்திய செயலவையில் கீழ்க்காணும் 9 நியமன உறுப்பினர்களை நியமிப்பதாகவும் பழனிவேல் அறிவித்துள்ளார்:-

  1. Dato’ S. Sothinathan – டத்தோ எஸ்.சோதிநாதன்
  2. Dato’ S. Balakrishnan – டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன்
  3. S. Sunther – எஸ்.சுந்தர்
  4. Senator Datuk V. Subramaniam – செனட்டர் டத்தோ வி.சுப்ரமணியம்
  5. R. Vidyanathan – ஆர்.வித்யாநாதன்
  6. M. Karuppanan – எம்.கருப்பண்ணன்
  7. A. Prakash Rao – ஏ.பிரகாஷ் ராவ்
  8. Datuk M. S. Mahadevan – டத்தோ எம்.எஸ்.மகாதேவன்
  9. L. Sivasubramaniam – எல்.சிவசுப்ரமணியம்

மேற்கண்ட புதிய நியமனங்கள் சங்கப் பதிவகம் செய்துள்ள முடிவுக்கு நேர் எதிரான நடவடிக்கையாக இருப்பதால், அவை செல்லுபடியாகுமா, மீண்டும் ஒருமுறை சங்கப் பதிவகம் இது குறித்து விளக்கமளிக்குமா என்பதெல்லாம் இனிமேல்தான் தெரியவரும்.

அதே சமயத்தில், மேற்கண்ட நியமன உறுப்பினர்களிலிருந்து, கீழ்க்காணும் பொறுப்பாளர்களையும் மஇகா அரசியல் சாசன சட்டவிதி 49-இன்படி நியமிப்பதாக பழனிவேல் அறிவித்துள்ளார்:-

தலைமைச் செயலாளர் – டத்தோ எஸ்.சோதிநாதன்

தலைமைப் பொருளாளர் –  டத்தோ எஸ்.முருகேசன்

தகவல் பொறுப்பதிகாரி – எல்.சிவசுப்ரமணியம்

“கடந்த 2009ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்ற வேளையில் புத்ரா, புத்ரி பிரிவுகள் மஇகாவில் இல்லை. கடந்த 2009, செப்டம்பரில் மஇகா அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட்ட கூடுதல் அம்சங்களின் அடிப்படையில் அப்பிரிவுகள் பிறகுதான் உருவாக்கப்பட்டன. எனவே இடைக்கால மத்திய செயலவையில் இவ்விரு பிரிவுகளின் பிரதிநிதிகள் யாரும் நியமிக்கப்படவில்லை,” எனவும்  பழனிவேல் தெரிவித்துள்ளார்.

மஇகா அரசியல் சாசனத்தின் 60.3ஆவது பிரிவின் கீழ் கட்சியின் நிர்வாகத்தை கண்காணிக்க தமக்கு அதிகாரமுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்த அதிகாரத்தின்படி மறுதேர்தல் நடத்துவது தொடர்பில் இடைக்கால மத்திய செயலவைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான அறிவிப்பை தாம் வெளியிட இருப்பதாகக் கூறியுள்ளார்.