கிறிஸ்ட்சர்ச், பிப்ரவரி 21 – உலககோப்பை போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான லீக் போட்டி நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கெயில் – ஸ்மித் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். கெயில் 4 ரன்களிலும் ஸ்மித் 23 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதன்பின் பிராவோ – ராம்டின் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராவோ 49 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். மறுமுனையில் இருந்த ராம்டின் அரைசதம் அடித்து அவுட்டானார்.
கடந்த போட்டியில் சதம் அடித்த சிமோன்ஸ் அரை சதம் அடிக்க ரசல் அதிரடியாக விளையாடி 13 பந்திற்கு 42 ரன்கள் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 310 ரன் குவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி 311 ரன் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் தற்போது விளையாடி வருகிறது.