Home உலகம் உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 310 ரன்கள் குவிப்பு!

உலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 310 ரன்கள் குவிப்பு!

483
0
SHARE
Ad

iகிறிஸ்ட்சர்ச், பிப்ரவரி 21 – உலககோப்பை போட்டியில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான லீக் போட்டி நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கெயில் – ஸ்மித் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள். கெயில் 4 ரன்களிலும் ஸ்மித் 23 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின் பிராவோ – ராம்டின் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராவோ 49 ரன்கள் எடுத்த நிலையில் காயம் காரணமாக வெளியேறினார். மறுமுனையில் இருந்த ராம்டின்  அரைசதம் அடித்து அவுட்டானார்.

#TamilSchoolmychoice

marlon-samuels-vs-pakistanகடந்த போட்டியில் சதம் அடித்த சிமோன்ஸ் அரை சதம் அடிக்க ரசல் அதிரடியாக விளையாடி 13 பந்திற்கு 42 ரன்கள் சேர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 310 ரன் குவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி 311 ரன் எடுத்தால் வெற்றி என்ற முனைப்புடன் தற்போது விளையாடி வருகிறது.