வாஷிங்டன், பிப்ரவரி 25 – இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருவது கூகுளின் பிளாக்கர். கூகுளுக்கு சொந்தமான இதில் பலர் கதை கவிதை உள்ளிட்ட பல செய்திகளை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
இலவசமாக பயன்படுத்தும் இந்த கூகுள் பிளாக்கரில் பலர் ஆபாச காணொளி ,ஆபாச படங்களை பதிவிடுகின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் 31-ஆம் தேதி முதல் பிளாக்கரில் ஆபாச காணொளி ,ஆபாச படங்களை பதிவிட கூகுள் நிறுவனம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது.
இது குறித்து கூகுள் கூறுகையில், “தற்போது இந்த வகையான வலைப்பூக்களை வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்கள் பிளாக்கரில் ஆபாச தளத்திற்குரிய adult பிரிவை தேர்வு செய்யவேண்டும் என்றும் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை என்றால் கூகுள் நிறுவனமே செய்துவிடும் என்றும் தெரிவித்துள்ளது.