Home உலகம் லீ குவான் இயூ இறந்ததாக பரவும் தகவல் பொய்யானது – அதிகாரப்பூர்வ தகவல்

லீ குவான் இயூ இறந்ததாக பரவும் தகவல் பொய்யானது – அதிகாரப்பூர்வ தகவல்

505
0
SHARE
Ad

lee_kuan_yew_ap_328சிங்கப்பூர், பிப்ரவரி 25 – சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூ இறந்துவிட்டதாக பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் போன்ற நட்பு ஊடகங்களில் இன்று மாலை பரவிய தகவலில் உண்மையில்லை என சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் முன்னணி செய்தி நிறுவனமான தி ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 5 -ம் தேதி, நிமோனியா காய்ச்சலால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள லீ குவான் இயூ(வயது 91) நினைவுடன் இருப்பதாக, அவரது மகனும் சிங்கப்பூரின் நடப்பு பிரதமருமான லீ சியான் லூங் கடந்த சனிக்கிழமை அறிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.