Home உலகம் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு நிதி அளிப்பது தொடரும் – ரஷ்யா அறிவிப்பு

அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு நிதி அளிப்பது தொடரும் – ரஷ்யா அறிவிப்பு

705
0
SHARE
Ad

STS-135_final_flyaround_of_ISS_1

மாஸ்கோ, பிப்ரவரி 26 – அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளிக் கழகத்துடன் இணைந்து எதிர்வரும் 2024-ம் ஆண்டு வரை பயன்படுத்தப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இத்தகவலை ரஷ்ய விண்வெளி ஆய்வுக் கழகம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது. முன்னதாக அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கான நிதியை 2020-ம் ஆண்டு முதல் நிறுத்தப்போவதாக ரஷ்யா அறிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

ரஷ்யா, அமெரிக்கா இடையே பனிப்போர் நீடித்து வந்தாலும் விண்வெளி ஆய்வுத்துறையில் மட்டும் இரு நாடுகளும் இணக்கமாக செயல்பட்டு வருகின்றன. அனைத்துலக விண்வெளி நிலைய செயல்பாடுகளில் தற்போது 16 நாடுகள் இணைந்துள்ளன. எனினும் ரஷ்யாவும் அமெரிக்காவும் தான் இந்த விண்வெளி நிலையத்தை நிர்வகிப்பதற்கு பெருமளவு நிதி அளித்து வருகின்றன.

எதிர்வரும் 2024 வரை அனைத்துலக விண்வெளி நிலையம் செயல்படும் என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வுக் கழகம் அறிவித்திருந்தது. ஆனால் 2020-ம் ஆண்டுடன் விண்வெளி நிலையத்திற்கான நிதியை நிறுத்தப் போவதாக ரஷ்யா திடீரென அறிவித்தது.ரஷ்யா தனக்கென தனியாக ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதே இந்த திடீர் முடிவுக்கு காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தனது முடிவை மாற்றிக் கொண்டு அனைத்துலக விண்வெளி ஆய்வு நிலையத்தை 2024 வரை நிதி அளித்து நிர்வகிக்க ரஷ்யா முன்வந்துள்ளது.