Home நாடு கொலை மிரட்டலைக் கண்டு அஞ்சவில்லை – காலிட்

கொலை மிரட்டலைக் கண்டு அஞ்சவில்லை – காலிட்

452
0
SHARE
Ad

Khalid Abu Bakar

கோலாலம்பூர், பிப்ரவரி 26 – தமக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டலைக் கண்டு சிறிதும் அச்சப்படவில்லை என ஐஜிபி காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

அடையாளம் தெரியாத அந்நபர்கள் தங்களது பொறுப்பற்ற செயலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அவர்களின் செயல்பாடு தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என சாடினார்.

#TamilSchoolmychoice

ஃபேஸ்புக் வலைதளத்தில் ஐஜிபி காலிட் அபு பக்கருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு காணொளிப் பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அது குறித்து கருத்துரைக்கும் போதே காலிட் அபு பக்கர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தமக்கு மிரட்டல் விடுத்துள்ள குழுவின் நடவடிக்கைகள் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளதாகக் கூறிய அவர், இப்பணியில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

“காவல்துறை தலைவர் என்ற வகையில் நம்பிக்கையுடன் என்னிடம் பல பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அப்பணிகளை மேற்கொள்ளும் என்னை இத்தகைய மிரட்டல்கள் பயமுறுத்தி விடாது. காவல்துறை அதிகாரிகளின் வாழ்க்கையில் இத்தகைய மிரட்டல்களை எதிர்கொள்வது என்பது வழக்கமான ஒன்று தான்,” என்றார் காலிட்.