Home உலகம் கிரிக்கெட்: ஐக்கிய அரபு அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து!

கிரிக்கெட்: ஐக்கிய அரபு அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து!

556
0
SHARE
Ad

iபிரிஸ்பேன், பிப்ரவரி 26 – உலக கோப்பை கிரிக்கெட்டில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்து அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

11-வது உலக கோப்பை கிரிக்கெட் கொண்டாட்டம் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரிஸ்பேனில் நேற்று நடந்த 16-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்தும், ஐக்கிய அரபு எமிரேட்சும் மோதின.

prv_9d554_1424842339மைதானத்தில் கொஞ்சம் ஈரப்பதம் காணப்பட்டதால் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் ஐக்கிய அரபு எமிரேட்சை விளையாட அழைத்தது. இதன்படி முதலில் விளையாடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 9 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது.

#TamilSchoolmychoice

அடுத்து ஆடிய அயர்லாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. அச்சமயம் அயர்லாந்தின் வெற்றிக்கு 15 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 2 விக்கெட் மட்டுமே இருந்தது.

gary-wilson-v-uaeஉச்சக்கட்ட பரபரப்புக்கு இடையே அயர்லாந்து அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 279 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. அயர்லாந்துக்கு இது 2-வது வெற்றியாகும்.