Home இந்தியா மோடி ஆட்சியில் மத ரீதியான வன்முறை அதிகரிப்பு – அனைத்துலக மனித உரிமை அமைப்பு புகார்!

மோடி ஆட்சியில் மத ரீதியான வன்முறை அதிகரிப்பு – அனைத்துலக மனித உரிமை அமைப்பு புகார்!

616
0
SHARE
Ad

NarendraModiலண்டன், பிஒப்ரவரி 26 – மோடி பிரதமரான பிறகு இந்தியாவில் மத ரீதியான வன்முறை அதிகரித்துவிட்டதாக அனைத்துலக மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி குற்றம்சாட்டியுள்ளது.

2015-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையில் மோடி அரசை அம்னெஸ்டி அனைத்துலக மனித உரிமை அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற மத ரீதியான மோதல் இந்து முஸ்லீம் இடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்து அமைப்புகள் கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களை கட்டாயப்படுத்தி மதமாற்றுவதாக எழுந்துள்ள புகார்களையும் சுட்டிக்காட்டியுள்ளது.

உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மத ரீதியான வன்முறை தொடர்ந்து அதிரித்து வருவதாகப் கூறியுள்ள அம்னெஸ்டி அமைப்பு, ஊழல், மத ரீதியான பாகுபாடு மற்றும் வன்முறை போன்றவை பல பகுதிகளிலும் பரவி இருப்பதாக தெரிவித்துள்ளது.

மக்களின் தனிப்பட்ட உரிமை மற்றும் கருத்துரிமையை ஒடுக்கும் நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அமைப்பு புகார் கூறியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான அவசரச் சட்டத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது அம்னெஸ்டி அமைப்பு.

இந்த அவரச சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களது சொந்த இடங்களில் வெளியேற்றப்படும் ஆபத்து இருப்பதாக கூறியுள்ளது.

குறிப்பாக மலை, அணைகட்டுகளின் அருகில் வசிக்கும் ஆதிவாசிகள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் நிறுவனங்களின் திட்டங்களால் பாதிக்கப்படுபவர்களின் கவலைக்கூட கேட்க மோடி அரசு தவறிவிட்டதாகவும் அம்னெஸ்டி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.