Home உலகம் அமெரிக்காவின் ஆதிக்கத்தால் மேற்காசிய நாடுகளில் குழப்பம் – ரஷ்யா! 

அமெரிக்காவின் ஆதிக்கத்தால் மேற்காசிய நாடுகளில் குழப்பம் – ரஷ்யா! 

502
0
SHARE
Ad

russia-usaமாஸ்கோ, பிரவரி 26 – உலகம் முழுவதும் தனது ஆதிக்கப்போக்கை அமெரிக்கா நிலைநாட்ட நினைப்பதால் மேற்காசிய நாடுகளில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டி உள்ளது,

இது தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஐநா பாதுகாப்பு அமைப்பின் கூட்டத்தில் கூறியதாவது:- “ஈராக் மீது 2003-ம் ஆண்டு படையெடுத்தது, லிபியப் புரட்சியில் 2011-ம் ஆண்டு இராணுவ ரீதியாகத் தலையிட்டது.”

“தற்போது சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தி வருவது உள்ளிட்ட அமெரிக்காவின் அனைத்து செயல்களும் ஐநா-வின் அடிப்படை விதிமுறைகளுக்கு எதிரானவையாகும்”

#TamilSchoolmychoice

“இந்தச் செயல்பாடுகள் தான் மேற்கு ஆசிய மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளின் ஆளுமையை குலைத்து, அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன்மூலம், இந்த நாடுகளில் பயங்கரவாதிகள் தங்களை வளர்த்துக்கொள்வதற்குச் சாதகமான சூழலை அமெரிக்கா ஏற்படுத்தித் தந்துள்ளது” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நீண்ட காலமாக அமெரிக்கா-ரஷ்யா இடையே இருந்து வரும் பனிப்போர், உக்ரைன் விவகாரம் முதல் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.