Home இந்தியா ராஜஸ்தானில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 277 பேர் பலி; 5715 பேர் பாதிப்பு!

ராஜஸ்தானில் மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு 277 பேர் பலி; 5715 பேர் பாதிப்பு!

570
0
SHARE
Ad

1422173207-2684ஜெய்ப்பூர், மார்ச் 4 – எச்1 என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவி உள்ளது. ராஜஸ்தானின் அனைத்து மாவட்டங்களிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது.

இம்மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5715 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களையும் சேர்த்து கடந்த ஜனவரி மாதம் முதல் தேதியில் இருந்து நேற்று வரை இம்மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் 55 பேரும்,

#TamilSchoolmychoice

அஜ்மீரில் 32 பேர், ஜோத்பூரில் 30, நகவுர்-25, பார்மர்-21, கோட்டா-13, சிகர்-9, பாலி-10. சிட்டோர்கர்-9, பன்ஸ்வாரா-6, டோங்க்-6, பில்வாரா-7, பிக்கானர்-4, சுரு-7, டவுசா-6 என நேற்று வரை மொத்தம் 277 பேர் பலியாகியுள்ளதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.