Home கலை உலகம் பிரியாணி விருந்தளித்த விஜய் – சுருதிஹாசன் காணொளி வெளியாகியுள்ளது!

பிரியாணி விருந்தளித்த விஜய் – சுருதிஹாசன் காணொளி வெளியாகியுள்ளது!

709
0
SHARE
Ad

vijayசென்னை, மார்ச் 4 – ஒவ்வொரு படம் முடியும் போதும் அந்தப் படத்தில் பங்கேற்றவர்களுக்கு பிரியாணி விருந்தளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் விஜய். தற்போது அதேபோல் நடந்துவரும் புலி படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதால் கடந்த மாதம் 28-ஆம் தேதி பிரியாணி விருந்தளித்தார் விஜய்.

புலியின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள ‘ஆதித்யராம் ஸ்டுடியோவில்’ நடந்து வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்ற 700 பேர்களுக்கு விஜய்யும், சுருதி ஹாசனும் பிரியாணி விருந்தளித்தார்.

Ilayathalapathy-Vijay-Serves-Biriyani-to-Puli-Team-03அனைவருக்கும் அவரே தனது கைப்பட பிரியாணி பரிமாறினார் விஜய். தற்போது விஜய்யும் – சுருதியும் பிரியாணி பரிமாறிய காணொளி இணையத்தளதில் வெளியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

puliசிம்புதேவன் இயக்கும் ‘புலி’ படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிராசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் இசை விரைவில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

விஜய்யும் – சுருதியும் பிரியாணி பரிமாறிய காணொளியை கீழே காணலாம்:

http://youtu.be/wPjFBlZJMUE