ஜகார்தா, மார்ச் 4 – இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்நிலநடுக்கம் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
படாங் நகரிலிருந்து மேற்காக 114 மைல் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், கடலுக்கடியில் 23 மைல் ஆழத்தில் இந்நிலநடுக்கம் நிகழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூகம்பத்தால் உயிரிழப்பு அல்லது சேதாரம் எதுவும் ஏற்பட்டதா என்று எந்த விவரமும் இது வரை தெரியவில்லை. முன்னதாக கடந்த 2004-ஆம் ஆண்டு சுமத்ரா தீவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேசியா, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சுனாமி தாக்கியது குறிப்பிடத்தக்கது.