Home இந்தியா கெஜ்ரிவாலின் கட்சிப் பதவி ராஜினாமா முடிவு நிராகரிப்பு!

கெஜ்ரிவாலின் கட்சிப் பதவி ராஜினாமா முடிவு நிராகரிப்பு!

411
0
SHARE
Ad

kajiriwalபுதுடெல்லி, மார்ச் 5 – ஆம் ஆத்மி கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பல்வேறு சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும் வகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் அவரின் விலகல் முடிவு நிராகரிக்கப்பட்டது. டெல்லி முதல்வராக பதவியேற்ற 45- வது நாளில் முதல்வர் பதவியையே ராஜினாமா செய்த கெஜ்ரிவால், மீண்டும் மக்கள் ஆதரவைப் பெற்று தனிப் பெரும்பான்மையுடன் தற்போது டெல்லியில் ஆட்சி அமைத்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மீது மக்களுக்கு நன்மதிப்பு உருவாகி வரும் இந்த நேரத்தில், அந்தக் கட்சியில் உட்கட்சிப்பூசல் தலைவிரித்தாடுகிறது. கெஜ்ரிவாலின் செயல்பாடு குறித்து அந்தக் கட்சியின் உயர் மட்டக் குழுவில் இருக்கும் யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ராஜினாமா செய்வதாக கெஜ்ரிவால் அறிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து முடிவு எடுப்பதற்காக டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விலகும் கெஜ்ரிவாலின் முடிவு நிராகரிக்கப்பட்டது.  மேலும், கெஜ்ரிவாலை விமர்சித்த யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷன் ஆகியோர் அரசியல் விவகாரக் குழுவிலிருந்து நீக்கப்பட்டனர்.