Home இந்தியா காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கெஜ்ரிவால் பேரம் – ஒலி நாடா பதிவு அம்பலம்! 

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுடன் கெஜ்ரிவால் பேரம் – ஒலி நாடா பதிவு அம்பலம்! 

575
0
SHARE
Ad

aravindபுதுடெல்லி, மார்ச் 12 – ஆம் ஆத்மி கட்சியின் முந்தைய ஆட்சி கவிழ்ந்தபோது, எப்படியேனும் தனது பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிய அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்கள் சிலரை விலைக்கு வாங்க முயற்சித்தது குறித்த ஒலி நாடா பதிவு ஆதாரம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத்தொடர்ந்து ஆம் ஆத்மியின் கட்சித் தலைவர் பதவியிலிருந்து அஞ்சலி தமானியா ராஜினாமா செய்துள்ளார். இதனால் அக்கட்சியில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளை பிடிக்க முடியாததால் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆட்சி அமைத்தது. எனினும் அந்த ஆட்சியை கெஜ்ரிவால் 49 நாட்களில் களைத்தார்.

#TamilSchoolmychoice

அதன் பின்னர், பா.ஜ.கட்சி அங்கு ஆட்சி அமைக்க முயற்சித்தது. எனினும், அதனை தடுக்கும் வகையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரை விலைக்கு வாங்க கெஜ்ரிவால் பேரம் நடத்தியதாக கடந்த ஆண்டில் செய்திகள் வெளியாகின.

எனினும், அதனை கெஜ்ரிவால் கடுமையாக மறுத்தார். இந்நிலையில் தற்போது அதற்கான ஆதாரம் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து கட்சியிலிருந்து விலகியது அஞ்சலி தமானியா கூறுகையில்,

damania“நான் கட்சியிலிருந்து விலகுகிறேன். இந்த முட்டாள்தனத்திற்காக நான் ஆம் ஆத்மியில் என்னை இணைத்துக் கொள்ளவில்லை. குதிரை பேரத்தில் ஈடுபடாத கொள்கைக்காகத்தான் நான் கெஜ்ரிவாலை நம்பினேன், அவரை ஆதரித்தேன்.”

“ஆனால், ஒலி நாடாவில் அவரின் குரலை கேட்டபோது நான் உடைந்துவிட்டேன். ஆம் ஆத்மி அரசியல் கட்சி அல்ல. அது ஆயிரக்கணக்கான தொண்டர்களின் கனவு. ஒன்று இந்த கட்சியின் கொள்கைப்படி நடக்க வேண்டும் இல்லாவிட்டால் இருக்கக் கூடாது. அதனால் நான் எனது பதவியைத் துறந்துள்ளேன்” என்று  கூறியுள்ளார்.

ஏற்கனவே கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கெஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள இந்த பிரச்னை ஆம் ஆத்மி கட்சிக்கும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.